தமிழ்நாடு பகுஜன் மக்கள் கட்டிட தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலச்சங்கம்

+91-8838653840

இவர் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், ஈரோடு மாவட்டத்தில் 1976-ஆம் ஆண்டு பிறந்தார். இளம் வயதிலிருந்தே சமூக நலனில் அக்கறை கொண்டவர்.

பள்ளி பருவத்திலேயே நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) இணைந்து செயல்பட்டார். தமிழக அரசின் அறிவொளி இயக்கம் திட்டத்தில் கல்வி அறியாதவர்களுக்கு கல்வி கற்பிக்கும் பணியிலும் பங்கேற்று பலருக்கு அறிவை பகிர்ந்தார்.

கல்லூரியில் தேசிய மாணவர் படை (NCC) சேர்ந்து 15-க்கும் மேற்பட்ட பயிற்சி முகாம்களில் பங்கேற்றார். அதில் சிறப்பாக ஆந்திர மாநிலம் செகுந்தராபாத் Army Attachment Camp இல் இராணுவத்துடன் இணைந்து பயிற்சி பெற்றார். மாணவர் படையில் சார்ஜன்ட் பதவி பெற்று, C Certificate என்ற உயர்ந்த அந்தஸ்தையும் பெற்றார்.

மேலும், கல்லூரியில் M.A. பயிலும் போது வரலாறு துறை செயலாளராக (History Department Secretary) பணியாற்றினார். படிப்பை முடித்ததும், தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் (Civil Defence, Home Guard) இரண்டு ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றினார்.

1998-ல் எல்.ஐ.சி (LIC)-யில் கிராமிய தொழில் முறை முகவராக (Rural Career Agent) பணியில் சேர்ந்தார். ஆரம்ப காலத்தில் வெறும் 20 நாட்களில் 200 நபர்களை சேர்த்து, கோட்டம் அளவில் முதலிடம் பிடித்தார். தொடர்ந்து சுமார் 2000 பாலிசி தாரர்களை உருவாக்கி, சிறப்பான சேவையை வழங்கி, சிறப்பு முகவர் என்ற பாராட்டைப் பெற்றார். மேலும், எல்.ஐ.சி-யின் உயரிய Chairman’s Club உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார்.

1999-ல் “சமூக நலச் சங்கம்” என்ற அமைப்பை நிறுவி அதன் தலைவராக பணியாற்றினார். அந்த அமைப்பின் மூலம் மருத்துவ முகாம்கள், சுற்றுப்புற சுத்தம், மரக்கன்றுகள் நடுதல், நூலகம் அமைத்தல், மகளிர் குழுக்கள் உருவாக்குதல், கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள், விழிப்புணர்வு பேரணி போன்ற பல சமூக நலப்பணிகளில் ஈடுபட்டார். இவரது அர்ப்பணிப்பை பாராட்டி, இந்திய அரசின் இளைஞர் மற்றும் விளையாட்டு துறை (NYK) 2003-ஆம் ஆண்டு Best Youth Award வழங்கி கௌரவித்தது.

2004-ம் ஆண்டு புதுடெல்லியில் உள்ள (International youth center) ல் இந்திய அளவில் நடைபெற்ற இரண்டு மாத பயிற்சி முகாமிற்கு தமிழக அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சியில் கலந்து கொள்ள அனுப்பப்பட்டவர்.

2004-ம் ஆண்டு இந்திய ஜனாதிபதியாக இருந்த டாக்டர். A.P.J. அப்துல்கலாம் அவர்களை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து இளைஞர் வளர்ச்சி கல்வி மாற்றம் போன்றவற்றை குறித்து கலந்துரையாடி அவரின் நன்மதிப்பை பெற்றவர்.

2005-ம் ஆண்டு Youth Hostel of India நடத்திய இமயமலை ஏறும் சாதனை முகாமில் கலந்து கொண்டு இமயமலை ஏறி சாதனை செய்தவர்.

2006-ல், இந்திய அரசின் நேரு யுவகேந்திரா கமிட்டி உறுப்பினராகவும், Youth Leadership Trainer ஆகவும் நியமிக்கப்பட்டார். நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை பயிற்சி வழங்கி, சிறந்த பயிற்சியாளராக போற்றப்பட்டார்.

2011-ல், மக்களுக்குப் பிடித்த பானமான தேநீர் துறையில் தொழில் தொடங்க வேண்டும் என்ற அவரது கனவு நனவாகியது. உலகத் தரமான தேயிலை உற்பத்தி செய்யும் அசாம் மாநிலத்தில் Prime Export India என்ற நிறுவனத்தை நிறுவி, அதன் Managing Partner ஆக செயல்படுகிறார். தரமிக்க தேயிலைகளைத் தேர்ந்தெடுத்து, பல்வேறு வடிவங்களில் Tea24 என்ற பெயரில் உலகளாவிய வணிகம் முன்னெடுத்து வருகிறார்.

உலகளவில் தலைசிறந்த தேயிலையை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் இவரின் லட்சியம் இமயமலை போன்று உயர வளர வாழ்த்துகிறோம்.

நன்றி.

BEST YOUTH AWARD GOVT OF INDIA ministry of youth affairs and sports 2003

MEETING WITH THE PRESIDENT OF INDIA DR APJ ABDULKALAM 2004

THE NATIONAL HIMALAYAN TREKKING ADVENTURE 2005

YOUTH LEADERSHIP TRAINER-NEHRU YUVA KENDRA (2006)

HOME GUARD-GOVERNMENT OF TAMILNADU (1990)

CHAIRMAN'S CLUB MEMBER -LIC OF INDIA (2011)

தலைவர் பற்றி

தலைவர்

. ராஜா M.A.,

சாதனைகள்

சான்றிதழ்கள்